தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஜ்ஜனஹல்லி ஊராட்சியில் சின்னவத்தலாபுரம் கிராமத்தில் நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜிகே மணி கலந்துகொண்டு நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சி.வி மாது, அஜ்ஜனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், ஏரியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராசா உலகநாதன் ஏரியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக