பாலக்கோடு சர்க்கரை ஆலை அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு கலைஞர் நூலகம்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 நவம்பர், 2024

பாலக்கோடு சர்க்கரை ஆலை அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு கலைஞர் நூலகம்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சர்க்கரை ஆலை அரசு  கலை ,அறிவியல் கல்லூரி அருகே  கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நூலக திறப்பு விழா மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமையில் நடைப்பெற்றது. தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி, கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு வரவேற்பு ஆற்றிய நிலையில் துணைச் செயலாளர்கள் மகேஷ் குமார், கோடீஸ்வரன், தங்கச் செழியன், நாசர், மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் ஒன்றிய  செயலாளர்கள் முனியப்பன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைத்து பேசியவர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் , இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த கலைஞர் நூலகத்தை பயன்படுத்தி தங்களின் அறிவு திறனை விரிவாக்கம் செய்து கொண்டு வாழ்கையில் முன்னேற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்பசேகரன், வெங்கடாசலம், மாநில விவசாயி அணி துணை செயலாளர், சூடப்பட்டி சுப்பிரமணி, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அரியப்பன், தருண், பொதுக்குழு உறுப்பினர் சையத் முர்த்ஜா, ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், வழக்கறிஞர் கோபால், இலகிருஷ்ணன், அடிலம் அன்பழகன் பேரூராட்சி தலைவர்கள் முரளி, வெங்கடேசன், வழக்கறிஞர் அணி சந்திரசேகர், கவுன்சிலர் கார்த்திகேயன், மாணவரணி சந்தர், பிரபு, ஐ.டி.விங்க் தமிழழகன், ஆனந்தன், விவசாய அணி குமார், நெசவாளர் அணி இராஜபார்ட், தொண்டரணி மணிவண்ணன்,குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகள் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad