கடமடை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா - கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 நவம்பர், 2024

கடமடை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா - கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டம், கரகதஅள்ளி ஊராட்சியில் உள்ள கடமடை மற்றும் வாக்குகாரன் கொட்டாய் கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு தயராக இருந்த நிலையில் மேல்நிலை நீர்த்த தேக்க தொட்டி திறப்பு விழா  முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு கரகத அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராஜீ முத்துவேல், ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், மாவட்ட கவுன்சிலர் சரவணன்,  அதிமுக நகர செயலாளர் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நிலம் வழங்கிய விவசாயி சின்ன பெருமாள் கைகளால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad