பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை இழிவாக பேசிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தடையை மீறி பாமக கௌரவ தலைவர் ஜி.கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கைகளுக்கு பதில் சொல்வது தான் என் வேலையா என பேட்டி அளித்து இருந்தார் இதனை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி தலைமையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்பி வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் அரசாங்கம் முன்னிலையில் திரண்ட பாமகவினர் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்கின்றனர். சுமார் 250 க்கும் மேற்பட்டோர் இதை கலந்து கொண்டு கைதாகினர். போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக