இதில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன் கலந்து கொண்டு வாக்குசாவடி முகவர்களிடையே பேசும் போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் திமுக கழக ஆட்சி அமைப்பதே லட்சியமாக கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் கடுமையாக உழைத்து 40 திற்க்கு 40 தொகுதிகளை வெற்றியடைய செய்ததை போன்று, வரும் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும்.
மேலும் வரும் 16, 17, 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், ஒன்றிய துணை செயலாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் அழகு சிங்கம், முத்துசாமி, மற்றும் கிளை செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக