தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.11.2024) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இக்கூட்டத்தில் கடந்த ஆண்டு பெறப்பட்ட ஓய்வூதியதாரர் மனுக்களின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, தற்போது ஓய்வூதியதாரர்களிடமிருந்து பெறப்பட்ட 39 மனுக்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் மனுதார்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 15 வருடமாக தீர்க்கப்படாத 6 வது ஊதிய கமிஷன் ஊதிய நிர்ணயம் செய்து ஓய்வூதியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கு துறை அலுவலர்களால் வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகை வழங்க ஆவண செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரார்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்படும் சேவை குறைபாடு உள்ளிட்ட பொருண்மைகள் விவாதிக்கப்பட்டது.
யுனைட்டட் இன்சூரன்ஸ் கம்பெனி உயர் அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அவர்களுடன் கருவூல அலுவலர், மருத்துவ அலுவலர் மற்றும் ஓய்வூதிய சங்கம் ஒருங்கிணைத்து சிறப்புக்கூட்டம் நடத்தி ஓய்வூதியர்கள் சுட்டிக்காட்டும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள குறைகளை களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.ரா.கவிதா, ஓய்வூதிய இயக்கக கணக்கு அலுவலர் திரு.கு.அருள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.வே.சேகர், கண்காணிப்பாளர் திரு.வி.சந்திரசேகரன் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக