தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்று திறனாளிகள் 100 நாள் வேலை கேட்டு போராட்டம் நடத்தினார், தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், வட்ட துணை செயலளர் திம்மன் தலைமையில் நடைப்பெற்ற இந்த போராட்டத்தில் பாலக்கோடு திரெளபதி அம்மன் கோயில் முன்பிருந்து மாற்றுதிறனாளிகள் ஊர்வலமாக சென்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு 100 நாள் வேலையை உறுதி செய், மாற்று திறனாளிகளுக்கு லேசான வேலையும், 319 ரூபாய் ஊதியமும் வழங்கு, மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்திடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பபாட்டம் செய்தனர்.
இதையடுத்து பாலக்கோடு போலீஸ் துனை சூப்பிரண்டு மனோகரன், தாசில்தார் ரஜினி, இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகைள நிறைவேற்றுவதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக