பென்னாகரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க கண்டன ஆர்ப்பாட்டமானதுவெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி குழு செயலாளர் ஆ ஜீவானந்தம் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. மாதன், வி.ரவி, மாவட்ட குழு உறுப்பினர் கே.அன்பு ஆகியோர்கள் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்,ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், வேலை வாய்ப்பினை அதிகரிக்க வேண்டும்,பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், பெரு நிறுவனங்களை தனியார் மையமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதில் இடைக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, பாண்டு, ராமசாமி, மாதப்பன், முன்னாள் செயலாளர்கள் ஜே.பி.சுப்பிரமணி, பி.எம்.முருகேசன் உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக