தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கு 12000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாதம் ரூ.7000 ஊதியத்திலிருந்து 12,500 உயர்த்தி வழங்கப்பட்டது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது பகுதி நேர ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பேற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள், பத்து லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்று மூன்றை ஆண்டு காலம் முடிந்த பிறகும் இதுவரை பகுதி நேர ஆசிரியர்களுக்கான அறிவிப்புகள் வரவில்லை. இதனால் தொடர்ந்து பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த பகுதி நேர ஆசிரியர்கள், திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக