நல்லம்பள்ளியில் உள்ள பூதனஹள்ளி கிராமத்தில் கல்குவாரி வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 நவம்பர், 2024

நல்லம்பள்ளியில் உள்ள பூதனஹள்ளி கிராமத்தில் கல்குவாரி வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.


தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள பூதனஹள்ளி  கிராமத்தில் கல்குவாரி வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் மனு அளித்தனர்.


தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள பூதனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கல்குவாரியில் பல பிரச்சனைகள் நடந்துள்ளது ஏற்கனவே உள்ள கல்குவாரி மற்றும் தற்பொழுதுவர இருக்கும் கல் குவாரிகள் எங்கள்  ஊராட்சிக்கு வேண்டாம் என பொதுமக்கள் சார்பாக  கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, ஆகவே தங்கள் பகுதிக்கு கல்குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad