கடலூர் விவகாரம்; தருமபுரியில் GK. மணி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 நவம்பர், 2024

கடலூர் விவகாரம்; தருமபுரியில் GK. மணி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.


கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வன்னியர் சமூக இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியதோடு வன்னியர் சங்க மாநில நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் விமர்சித்த நபர்களை கண்டித்து தர்மபுரி மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆரவாளர்களள் பாமக கவுரவ தலைவர் G.K. மணி தலைமையில் இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மகேஸ்வரன் அவர்களிடம் நடவடிக்கை எடுக்ககோரி நேரில் சென்று மனு அளித்தார். 


முன்னதாக தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வன்னியர்சங்க மற்றும் பமாகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பு வாகனங்களில் திரண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. உடனடியாக அங்கு காவர்துறையினர் குவிந்தனர்.


பின்னர் பாமக கவுர தலைவர் G.K.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டும் நேரில் மனு அளிக்க காவல்துறையினர் அனுமதித்தனர். பின்னர் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் நேரில் மனு அளித்து  விடுதலை சிறுத்தைகள் கட்சிரை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள நேரில் பேசியபின்னர் காவர்கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.


பின்னர் பத்திரிக்கையாளர்க ள சந்தித்து பாமக கவுர தலைவர் G.K.மணி கடலூர் மாவட்ட சம்பவத்திற்கு கடும் கண்டணத்தை தெரிவித்து உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கையை காவர்துறை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad