மக்கள் தேசம் கட்சி தர்மபுரி சார்பாக மாவட்ட செயலாளர் செல்வகமல் மற்றும் கார்த்தி மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார், அந்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுக்கா வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் E.இசக்கிராஜா காவலர் விக்னேஷ் மற்றும் அடையாளம் காட்டக்கூடிய நான்கு காவலர்கள் எங்கள் கட்சியின் நெல்லை மாவட்ட பொறுப்பாளரான K.ஆசை தம்பி மற்றும் அலெக்ஸ் மேற்கண்ட இருவரையும் 20.11.2024 புதன்கிழமை அன்று வீரவநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து உதவி ஆய்வாளர் இசைக்கிராஜா தலைமையில் காவலர்கள் மேற்கொண்ட இருவரின் வலது கைகளை மிருகத்தனமாக உடைத்துள்ளனர்.
ஏன் எங்களை இவ்வளவு கொடுமை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் Encounter Specialist நான் அழைத்தால் வரமாட்டியா என்று சாதிப் பெயர்களை சொல்லி மிரட்டியுள்ளார், எனவே தனது அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்த உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா காவலர் விக்னேஷ் மற்றும் நான்கு காவலர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக