தர்மபுரி மாவட்ட பென்னாகரம் அடுத்த ராமானுர் கிராமத்தில் காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்கு விரட்ட ஊர் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
தர்மபுரி அடுத்த பென்னாகரம் அருகே வணப்பகுதியை ஒட்டியுள்ள ராமனூர் கிராமத்தில் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களை அழித்து, பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்து வருகிறது, இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் கவலையில், அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் ராமனூர் கிராமம் மக்கள் அருகே உள்ள காட்டு பகுதியில் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளது காட்டுப் பன்றிகள் விளைநிலங்களில் செய்யப்பட்ட பயிர்களை சேதம் செய்கின்றன, பன்றிகள் மூலம் ஆபத்து உண்டாகிறது இதனால் வயல்களில் பயிர்கள் காய்கறி நடவு கூட முடியாமல் அவதிப்படுகிறோம், இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மனு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக