தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அட்டபள்ளம் கிராமத்தில் சிட்டா எண் 10 52 எண்ணில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக கூறப்படுகிறது, இவர் முனியப்பன் மகன் ராமகிருஷ்ணன், நாராயணன், மகாதேவன், வாசுதேவன் என்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், அரசு புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மேலும் இந்த ஆக்கிரமிப்பு குறித்து முனியப்பன் மகன் ராமகிருஷ்ணன், நாராயணன், மகாதேவன், வாசுதேவன் ஆகியோரிடம் இது ஊர் பொதுமக்கள் கேள்வி கேட்டால் அவர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுகின்றனர், எங்களுக்கு அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊர் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக