தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வன சரகத்திற்கு உட்பட்ட காவேரி கரை அருகே உள்ள மணல்திட்டு, புளியன்கோம்பு, கொங்காரப்பட்டி, சிங்காபுரம், ஏமானூர் பகுதிகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் இதர மக்களும் காட்டை விட்டு வெளியேறச் சொல்லி பென்னாகரம் வனசரத்தில் உள்ள வன அலுவலர்கள் மக்களை பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர், கிராம மக்கள் வன உரிமை அங்கீகாரம் கேட்டு கிராம சபை தீர்மானத்துடன் தனி தாசில்தார் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் மனு கொடுத்த பின்னும் கோட்ட அளவிலான குழு மனுக்களை ஆய்வு செய்யும் முன்பே இந்த பகுதிகளில் நிலத்தை உழவடை செய்த மக்களை மிரட்டும் விதமாக தனியாக விசாரணைக்கு வர வேண்டும் என்று வனத்துறையினர் மிரட்டி வருகின்றனர். ஒகேனக்கல் மணல் திட்டு சேர்ந்த கிருஷ்ணன் வீட்டை இடித்ததுடன் அங்கிருந்த கர்ப்பிணி பெண்கள் சிவசங்கரி, சுகுணா, உமா ஆகியோரை வனத்துறையினர் தாக்கப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டனர்.
வனத்துறை சார்ந்து வாழும் மக்களுக்கும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு பட்டா வழங்கிட வேண்டும் என்று தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்தனர். நிகழ்ச்சியின் போது குணசேகரன் தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர், ரங்கநாதன் ஐந்தாவது அட்டவணைக்கான பிரசார குழு ஒருங்கிணைப்பாளர், சுப தென்பாண்டியன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மனித உரிமை கூட்டணி தலைவர், செந்தில் ராஜா சமூக ஆர்வலர், தர்மலிங்கம் சாம் நிறுவனம் மாவட்ட பொது செயலாளர் மற்றும் பழங்குடியினர் மக்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக