பொம்மிடி கோட்டைமேடு பகுதியில் புதிதாக அமைய உள்ள மது கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மது கடை வேண்டாம் என்று கோரிக்கை மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 நவம்பர், 2024

பொம்மிடி கோட்டைமேடு பகுதியில் புதிதாக அமைய உள்ள மது கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மது கடை வேண்டாம் என்று கோரிக்கை மனு.


தர்மபுரி அடுத்த பொம்மிடி கோட்டைமேடு பகுதியில் புதிதாக அமைய உள்ள மது கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து  தொடர் போராட்டத்தின் நான்காவது நாளான இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மது கடை வேண்டாம் என்று கோரிக்கை மனு அப்பகுதி மக்களால் வழங்கப்பட்டது.


மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இங்கு மது கடை வராது என கூறினார். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் வருவாய் கோட்டாட்சியர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர், ஆகியோருக்கு மனு அனுப்பியது. மாவட்ட டாஸ்மாக் மேலாளர், அரூர் டிஎஸ்பி, பொம்மிடி காவல் நிலையம், பொம்மிடி  ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு நேரில் மனு வழங்கப்பட்டது.


ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் சி எம் ஆர் முருகனிடம் மனு வழங்க இதை அடுத்து  கிராம சபை கூட்டத்தில்  மதுக்கடை வேண்டாம் என தீர்மான நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொம்மிடி, கொட்டாய்மேடு ஊர் மக்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad