தர்மபுரியில் போட்டோ- வீடியோகிராபர்கள் நலச்சங்க முப்பெரும் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 நவம்பர், 2024

தர்மபுரியில் போட்டோ- வீடியோகிராபர்கள் நலச்சங்க முப்பெரும் விழா.


தர்மபுரி மாவட்ட போட்டோ - வீடியோகிராபர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம், 2025 ஆம் ஆண்டுக்கான டைரி, காலண்டர் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தர்மபுரி ரோட்டரி அரங்கில் அருகில் நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் ஜி. சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் பி. ஆனந்தன் வரவேற்று பேசினார். 


மாவட்ட செயலாளர் எம். கன்னியப்பன், மாவட்ட பொருளாளர் எம். வேடியப்பன் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். மாவட்டத் துணைத் தலைவர்கள் எஸ். கிருஷ்ணன், ஏ. சுப்பிரமணி, மாவட்ட இணை செயலாளர்கள் டி.பிரபு குமார், டி. சிவசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் சங்கத்தின் மாநில தலைவர் ஏ. சிவகுமார், மாநில அமைப்பாளர் எஸ். சரவணன், மாநிலத் துணைத் தலைவர் ஜி. அசோக், மாநில இணை செயலாளர். எஸ்.எம். மூர்த்தி, மண்டல செயலாளர் எஸ். ஜெகநாதன் ஆகியோர் சிறப்பு உழைப்பாளர்களாக கலந்து கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு டைரி, கலண்டர் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினர். 


தொடர்ந்து 10,  12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ். அசோகன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad