தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்த நாளையொட்டி தருமபுரி கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அசைவ உணவை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி வழங்கினார்.
தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதனடிப்படையில் தருமபுரி கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன் ஏற்பாட்டில் சோகத்தூரில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு அசைவ உணவை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி வழங்கினார்.
இதில் அவை தலைவர் செல்வராஜ், பொருளாளர் தங்கமணி, ஓன்றிய செயலாளர்கள் காவேரி, வீரமணி மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் உதயசூரியன், சூர்யாபிரவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக