பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 நவம்பர், 2024

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா  ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பள்ளி கல்வித்துறை சார்பில் 14, 17 மற்றும்  19 வயதிற்க்குட்பட்ட சரக அளவிலான ஹாக்கி போட்டி   நடைப்பெற்றது. இப்போட்டியினை தலைமை ஆசிரியர் லட்சுமணன் துவக்கி வைத்தார்.


இப்போட்டிக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், ஹாக்கி பொறுப்பாளரும்,  உடற்கல்வி ஆசிரியரும் மாநில நல்லாசிசிரியர் விருது பெற்ற ரங்கநாதன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.


இப்போட்டியில் பாலக்கோடு, நரிப்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், பேகாரஅள்ளி, வெங்கட்டம்பட்டி ஆகிய  7 அரசு மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த   7 அணிகளை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகள் அடுத்த மாதம் திருச்சியில் 19 வயதிற்குட்பட்டவருக்கும், மதுரையில் 17 வயதிற்குட்பட்ட வருக்கும், தேனியில் 14 வயதிற்குட்பட்டவருக்கும் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளனர்.


இப்போட்டிக்கு உடற்கல்வி இயக்குநர் மாதேஷ், இளையராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் அறிவழகன், குமார், குமரன், விஜயகுமார், பாரதி, பெருமாள், தீபா, சரஸ்வதி, பழனி  ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்து செயல்பட்டனர். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad