தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 நவம்பர், 2024

தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.11.2024) நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான ஊரக / நகர்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழு அமைத்தல், வங்கி இணைப்புகள் ஏற்படுத்துதல், பண்ணை சார்ந்த / பண்ணை சாரா தொழில் நடவடிக்கைகள், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மீட்கப்பட்ட கொத்தடிமைகள் திட்டம் மற்றும் திட்டம் சார்ந்து வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார்கள். மேலும் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் செயல்பாடுகள் முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்கினார்கள்.


இந்த ஆய்வுக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.அ.லலிதா, உதவி திட்ட அலுவலர்கள், வட்டார மேலாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த சமுதாய அமைப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad