பென்னாகரத்தில் தென்னிந்திய மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 நவம்பர், 2024

பென்னாகரத்தில் தென்னிந்திய மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா நடைபெற்றது.


தென்னிந்திய மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா, ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட வாலிபால் போட்டியை இன்று பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி துவங்கி வைத்தார்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எட்டியாம்பட்டி கிராமத்தில் தென்னிந்தியாவின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட வாலிபால் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 22 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டியை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி ஈஷா புத்துணர்வு கோப்பை காண முதல் கட்ட போட்டியை துவங்கி வைத்து வாலிபால் விளையாடும் வீரர்களுக்கு  வாழ்த்துக்கள் கூறி உரையாற்றினார். 


இந்த வாலிபால் விளையாட்டு போட்டியில் முதல் கட்ட போட்டி நடைபெறும் நிலையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு 9 ஆயிரம் ரூபாயும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 6000 ரூபாயும் மூன்றாம் இடம் பிடிக்கும் எனக்கு மூன்றாயிரம் ரூபாயும் நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு 2000 ரூபாய் வழங்கப்படும்.இந்த போட்டிகள் முடிவடைந்து வெற்றி பெறும் அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு செல்லும். 


இந்த நிகழ்ச்சியில் பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார் பாமக பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் இளைஞர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி நிர்வாகிகள் அருள் நாசா உலகநாதன் மந்திரி சட்டநாதன் ராஜேந்திரன் ஜீவா சந்தோஷ் ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் முனுசாமி ஜெயம் பாலாஜி துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad