தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட ஆட்சியர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, மற்றும் கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர் காளியப்பன் உத்தரவின் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி மற்றும் கம்பைநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன், கிரேடு 1 காவலர் சரிதா உள்ளிட்ட குழுவினர் இணைந்து கம்பைநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மளிகை, பெட்டி பீடா கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கம்பைநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருவணம்பட்டி அஞ்சல் ஈ.அக்ரஹாரத்தில் ஒரு பெட்டி கடை மற்றும் கம்பைநல்லூர்- இருமத்தூர் ஜங்ஷன் பகுதியில் ஒரு பீடா கடை என இரண்டு கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா உத்தரவின் படி,மேற்படி இரண்டு கடைகள் ,கடை இயங்க தடை விதித்து , உடனடி அபராதம் தலா ரூபாய்.25000 விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் 15 தினங்கள் வரை கடை திறக்கக் கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக