பாலக்கோட்டில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து அதிரடி ஆய்வில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை மற்றும் ரூபாய்.50000 அபராதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 நவம்பர், 2024

பாலக்கோட்டில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து அதிரடி ஆய்வில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை மற்றும் ரூபாய்.50000 அபராதம்.


தர்மபுரி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ், மற்றும் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன்,  காவல்  ஆய்வாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, நடமாட்டம் குறித்து தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் சிங்காரம், தலைமை காவலர் புவனா உள்ளிட்டோர், பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் பாலக்கோடு கோட்டை தெருவில் ஒரு மளிகை கடையில்,  தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லீப், விமல், வி1 டொபோக்கோ உள்ளிட்ட 1 கிலோ அளவிலான சுமார் ரூபாய். 2000 மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. 


பாலக்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோகுல் அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கையும்,  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள்   தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த கடை ஏற்கனவே ஒரு முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் மறுபடியும் விற்பனை செய்ததால்  மளிகை கடை விற்பனையாளருக்கு ரூபாய்.50000 அபராதமும்,  30  தினங்கள் கடை இயங்க தடை விதித்து   உத்தரவிட்டார். 


அதனை காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் சிங்காரம் உடன் தலைமை காவலர் திருமதி.புவனா ஆகியோர் இணைந்து மேற்படி கடை விற்பனையாளர் இடம் நேரில்  நோட்டீஸ் வழங்கி  உடன் அபராதம் செலுத்திடவும், இன்று முதல் 30 தினங்கள் கடை திறக்கக் கூடாது என எச்சரித்து கடையை மூட செய்தனர். நேற்றைய முன் தினமும் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ஒரு பீடா கடையில் தடை செய்யப்பட்ட  புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து கடை மூடப்பட்டு ரூ.25000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது, பதுக்கி வைத்திருத்தல் தெரிந்தால் 9444042322 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க  உணவு பாதுகாப்பு துறையினர் கேட்டுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad