கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு, ஒன்றிய அளவில் வட்டார குழந்தைகள் பாதுகாப்புக்குழு, பேரூராட்சிகள் அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகுகுழு, நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு சமுதாயத்தால் குழந்தைகளுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க மேற்கண்ட குழுக்கள் மூலம் கூட்டங்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாதந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் நேர்காணல் முகாம், ஊங்களைதேடி உங்கள் ஊரில் முகாம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்த்தின் கீழ பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை, வளரிளம் கர்ப்பம், போன்றவைகளால் குறித்த விழிப்புணர்வுகள் மற்றும் அரசு கட்டிடம் மற்றும் பள்ளி வளாகங்களில் மற்றும் சுற்றுசுவர்களில் விழிப்புணர்வு ஒவியங்கள், மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவித்திட தொலைபேசி எண்ணும் எழுதப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்து துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், களப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம சுகதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பெண் குழந்தைககளின் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் வன்கொடுமை தடுத்தல், பாலினம் கண்டறிதல் தடுத்தல் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட பல கூட்டங்கள் வாயிலாகவும் அறிவுறுத்தப்பட்டு தற்சமயம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறுவதினை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்ப்பம், குழந்தை திருமணம், ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 165 போக்சோ வழக்குகளும், மற்றும் ஜனவரி 2024 முதல் அக்டோபர் 2024 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்ப்பம், குழந்தை திருமணம், ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 171 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
மேலும் நமது மாவட்டத்தில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கிடையே அதிக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தானாக புகார் அளிக்க முன் வருவதால் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு வழக்குகள் அதிகரித்து வருகிறது. மேலும் வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களினால் இன கவர்ச்சியினால் குழந்தைகள் பாதிப்பு அடைகின்றனர், அவர்களுக்கு உளவியல் ஆலோசணைகளும் வழங்கப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்ப்பம், இளம் வயது திருமணம், போன்ற குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கட்டாயம் போக்சோ வழக்குகள் பதியப்படும்.
குழந்தைகள் மீது அல்லது குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் நடைபெறுவதாக தகவல் தெரிந்தால் உடனடியாக சைல்டு ஹெல்ப் லைன் 1098 எண்ணிற்கு புகார் அளித்திட பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு என ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக