தர்மபுரிமாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பண்டைய பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சிவகுரு தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பழங்குடியினர் மாநில தலைமை சங்க மாவட்ட பொதுசெயலாளர் மருத்துவர் முல்லைவேந்தன், மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி, இருளர் கூட்டமைப்பு தலைவர் முத்துவேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பழங்குடியின மக்களுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ நிறுவனத்துடன் இணைந்து பாரத பிரதமரின் ஜன் தன் வங்கி கணக்கு துவங்குதல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பழங்குடி இன மக்களை இனைத்தல், வன உரிமை பட்டா வழங்குதல், இலவச வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, குடும்ப அட்டை, கறவைமாடு, இலவச மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் சுகாதார துறை சார்பில் பொதுமருத்துவ உடல் பரிசோதனை செய்து நோய் கண்டறிந்து மருந்துகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை, மருத்துவ துறை, வேளாண்மை துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக