தர்மபுரி கடைவீதி பகுதியில் அரசு துவக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 நவம்பர், 2024

தர்மபுரி கடைவீதி பகுதியில் அரசு துவக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்.


தர்மபுரி கடைவீதி பகுதியில் அரசு துவக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் போன்ற பணிகளை தர்மபுரி அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி அதிமுக 23வது வார்டு  நகரமன்ற உறுப்பினர் நாகராஜ் முன்னிலையில் வாக்காளர் பெயர் சேர்த்தல் பெயர் நீக்குதல் முகாமில் அப்பகுதி அதிமுக கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு புதிய வாக்காளர் சேர்க்க முகாமில் ஈடுபட்டனர்.


1.1.2025 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்திலுள்ள வாக்களர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 28-ந் தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1.1.2025 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

இதனடிப்படையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், அதைத்தொடர்ந்து அதிமுக கட்சியின் சார்பில் தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் அந்தந்த பகுதியில் அதிமுக பொறுப்பாளர்கள் புதிய வாக்காளர்கள் சேர்க்க முகாமில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad