தருமபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு பொது மருத்துவ முகாம் எண்ணங்களின் சங்கமம்-NDSO, V4U Trust, RRC-தொண்டு நிறுவனம், மை தருமபுரி அறக்கட்டளை இணைந்து மை தருமபுரி மணீஷ் மருத்துவ சேவை திட்டம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நாளை (நவம்பர் 10), காலை 9:00 மணி முதல் 1:30 மணி வரை பாப்பாரப்பட்டி பரம்வீர் பள்ளியில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் BGR மருத்துவமனை, கவிதா கிளினிக், MK DIABETES கிளினிக், தியா பல் மருத்துவமனை ஆகிய மருத்துவனைகளின் மருத்துவர்கள் ஆலோசனையும், பரிசோதனைகளையும் மேற்கொள்ள உள்ளனர். இந்த முகாமினை பாலக்கோடு ஸ்ரீ சாய் பாரமெடிக்கல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தினர் தன்னார்வலர்களாக பங்களிப்பு செய்கின்றனர்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் தருமபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஸ்குமார் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக