தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மெயின் அருவிக்கு தண்ணீர் செல்லக்கூடிய பகுதியில் உடம்பில் பாதி பாகங்கள் மட்டுமே இருந்த புள்ளி மான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனை அறிந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் பாதி உடல் கொண்ட புள்ளிமானை அப்புறப்படுத்தினர். சுமார் மூன்று நாட்களுக்கு மேலாக உயிரிழந்த இந்த புள்ளி மானின் மீதி உடல் பாகங்கள் ஆற்றில் உள்ள முதலைகள் அல்லது மீன்கள் உட்கொண்டு இருக்கலாம் என வனத்துறை என தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக