தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர், மேம்பாட்டு நிறுவனம், சென்னை திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையிலும் 30.11.2024 அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பேரிடர் காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பற்றிய விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், நீர்நிலைகளின் கரைகள் சேதாரம் ஏற்படும்போது தடுப்பு நடவடிக்கையாக போதுமான அளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க பொதுப்பணித்துறைஃ ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிவாரண முகாம்களான சமுதாயக்கூடங்கள், திருமணமண்டபங்கள், பள்ளிகள் பற்றிய விவரப்பட்டியல் தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்து போதிய அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அனைத்து அலுவலர்களும் தலைமையிடத்திலிருந்து மழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய தெரிவிக்கப்பட்டது.
மருத்துவத்துறையினர் கர்ப்பிணி பெண்கள் குறித்த விவரங்களை சேகரித்து மழைகாலத்தில் தேவை ஏற்படும் நேர்வுகளில் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சி துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகட்டிடங்களை ஆய்வு செய்து பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை சரிசெய்யவும், பாதிப்புகள் ஏதும் ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பவர்ஷா, ஜே.சி.பி, புல்டோசர்ஸ் போன்ற உபகரணங்களை மழைகாலத்தில் பயன்படுத்த ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் வாரியம் அலுவலர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும் தெரிவிக்கப்பட்டது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு எஸ் மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர். கவிதா உள்ளிட்ட தொடர்புடைய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக