தர்மபுரி மாவட்டம், தர்மபுரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பாலாஜி (47), இவர் காரிமங்கலம் அடுத்துள்ள இராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியாக பணியாற்றி வந்தார், இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்க்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து பணிக்கு சரிவர வராமல் இருந்து வந்த பாலாஜி தனக்கு பதிலாக வேறு ஒருவரை பாடம் நடத்த அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாதுவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில், ஆசிரியர் பாலாஜி பணிக்கு வராமல் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பணி செய்ய அனுப்பியது உண்மை என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பாலாஜியை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
மேலும் பாலாஜிக்கு பதில் வேறு ஒருவரை ஆசிரியர் பணி செய்ய அனுமதித்தது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமியிடம் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக