நீர் நிலைகளிலிருந்து விவசாய /மட்பாண்ட தொழிலுக்கு வண்டல் / களிமண் எடுத்து பயன்படுத்த விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல் . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 நவம்பர், 2024

நீர் நிலைகளிலிருந்து விவசாய /மட்பாண்ட தொழிலுக்கு வண்டல் / களிமண் எடுத்து பயன்படுத்த விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல் .


தருமபுரி மாவட்ட நீர் நிலைகளிலிருந்து விவசாய /மட்பாண்ட தொழிலுக்கு வண்டல் / களிமண் வழங்கல் - தொடர்பாக. தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலிருந்து விவசாய பயன்பாடு / மட்பாண்ட தொழிலுக்கு இலவசமாக வண்டல்/களிமண் எடுத்து பயன்படுத்திக்கொள்ள தகுதிவாய்ந்த நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 42 ஏரிகள் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏரிகள் ஆகமொத்தம் 153 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டு இணையதள வழியாக சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி தருமபுரி மாவட்டத்தில் 1431 விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு அதில் 945 விண்ணப்பங்களுக்கு வட்டாட்சியர்களால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மொத்தம் 120753 கனமீட்டர் வண்டல்/ களிமண் எடுத்து விவசாயிகள் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் மேலும் பயன் பெறவிரும்பும் விவசாயிகள், மட்பாண்ட தொழிலாளர்கள் விவசாய நிலங்களை மேம்படுத்தவும், மட்பாண்ட தொழிலை சிறப்புற செய்யவும் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி https://tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad