பென்னாகரம் வடக்கு ஒன்றிய எட்டியாம்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48-ஆவது பிறந்தநாள் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட துணை செயலாளர் உமாசங்கர் தலைமை தாங்கினார். பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீரமணி, விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பாப்பாரப்பட்டி நகர செயலாளர் சண்முகம், அவைத்தலைவர் விஜய் ஆனந்த், முன்னாள் நகர செயலாளர் திருவேங்கடம், பேரூராட்சி கவுன்சிலர் தர்மலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முனியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் முனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக