தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பாலக்கோடு வட்ட கிளையின் 15வது வட்டமாநாடு, வட்டதலைவர் தமிழ்செல்வன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் வட்ட செயலாளர் மாணிக்கம், பொருளாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் தெய்வானை, மாவட்ட துனைத் தலைவர் குணசேகரன் முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் சுருளிநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து, காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பிணர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக