அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் அதகப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று கலந்து கொண்டார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (08.11.2024) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம், பாச்சேரி மற்றும் பெரம்பலுர் மாவட்டம், ஆலந்தூர் ஒன்றியம், மலையப்ப நகரில் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி. சாந்தி இஆப., அவர்கள் அதகப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழாவில் இன்று (08.11.2024) கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து, இனிப்புகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டாரம், அதகப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.64.08 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறை கட்டடங்கள், மொரப்பூர் வட்டாரம், முத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.78.24 மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வக கட்டடங்கள், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.502.22 இலட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகட்டடங்கள், என மொத்தம் ரூ.644.54 இலட்சம் மதிப்பீட்டில் 11வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வக கட்டடங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் இன்று காணொளி காட்சி வாயிலாக (OFFLINE) திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் திருமதி.ஐ.ஜோதி சந்திரா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும்உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக