மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த ஆணின் உடல் நல்லடக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 நவம்பர், 2024

மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த ஆணின் உடல் நல்லடக்கம்.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடலை போலீசார் கைப்பற்றி, இறந்தவரை பற்றி விசாரித்ததில் இவரைப் பற்றி விவரம் எதுவும் கிடைக்கவில்லை, எனவே அந்த உடலை தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து மை தருமபுரி தன்னார்வலர்கள் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டார். 


இதில் பென்னாகரம் காவல் நிலைய காவலர் கோவிந்தராசு, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், செந்தில் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த 118 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad