தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பாப்பாரப்பட்டி அருகே மாக்கனூர் கிராமத்தில் இருந்து மூக்கன்அள்ளி,பூச்செட்டிஅள்ளி, வேறஅள்ளி, ஆகிய கிராமங்களுக்கு செல்லும் தார் சாலை ஆனது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மிகவும் குண்டும் குழியமாக சீரமைக்காத வண்ணம் உள்ளது இந்த வழியாக செல்லும் அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் பள்ளி கல்லூரி வாகனங்கள் வழியாக செல்லும் பொழுது தார் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் உரிய நேரத்திற்கு பணிக்கு பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் பள்ளி வாகனங்கள் அரசு பஸ்கள் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் அப்பகுதியில் விளையும் விவசாய பொருட்களை கொண்டு செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் இந்த தார் சாலையானது கடந்த 35 வருடங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டு ஆனால் இதுவரை சீரமைக்க அரசு முன்வரவில்லை என தெரிவிக்கின்றனர் மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் எனவே இந்த தார் சாலையை உடனடியாக தமிழக அரசோ அல்லது மாவட்ட நிர்வாகமோ உடனடியாக தலையிட்டு சீரமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக