பாலக்கோடு வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 நவம்பர், 2024

பாலக்கோடு வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (12.11.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இச்செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ள திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் தரமாகவும் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பிக்கன அள்ளி ஊராட்சி, பிக்கன‌அள்ளி  காலனியில்  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்  (2024-2025) கீழ்  ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வீடு கட்டுமான பணிகளையும், மகேந்திரமங்கலம் ஊராட்சி, சீங்கேரியில் நபார்டு திட்டத்தின் (2024-25) கீழ் ரூ.8.42 இலட்சம்  மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் 30000 லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், இதே பகுதியில் உள்ள சீங்கேரிஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் CFSIDS (2023-24) கீழ் ரூ.32.80 இலட்சம்  மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைகளின் கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலஅளவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து, பாலக்கோடு வட்டம், மல்லுப்பட்டி பகுதி நேர நியாயவிலைக் கடையினையும், மல்லுப்பட்டி ஊர்புற நூலகத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நியாய விலைக்கடையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பும் குறித்தும், நூலகத்திற்கான அடிப்படை தேவைகள் குறித்தும் கேட்டறியப்பட்டுள்ளது. பின்னர், பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் மதிய உணவினையும், பாலக்கோடு, அரசினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்தும், விடுதியில் உள்ள குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மாணாக்கர்களிடம் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கணேஷ், திரு.நீலமேகம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad