தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தீபாவளி தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் மெயின் அருவிக்கு செல்லக்கூடிய நடைபாதை பகுதியில் மீன் வறுவல் கடை மற்றும் பலகார கடைகள் போடப்பட்டு உள்ளன அவ்வாறு நடைபாதைகளில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் விறகு அடுப்பு மூலமே மீன் வறுவலும் பலகார பொருட்களும் செய்து வருகின்றனர் இந்த நிலையில் மீன் கடைகளில் இருந்து புகையத் தொடங்கியதால் அருகில் இருந்த மரக்கிளையில் மலைத்தேனீக்கள் புகையின் காரணமாக கலைந்து மெயின் அருவியில் குளிப்பதற்காக நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகளை கடித்தது இதில் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தேனி கொட்டியதில் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த சுற்றுலா பயணிகள் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக