பாலக்கோடு புறவழி சாலையில் டிராக்டர்-சொகுசு கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து-10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 நவம்பர், 2024

பாலக்கோடு புறவழி சாலையில் டிராக்டர்-சொகுசு கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து-10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் (27) இவர் நேற்று மாலை ஜக்கசமுத்திரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சொகுசு காரில் சென்று சென்று கொண்டிருந்தார். சிக்கார்தனஅள்ளியை சேர்ந்த பூவரசன் (22), என்பவர் பாலக்கோட்டில் இருந்து வெள்ளிசந்தை நோக்கி டிராக்டரை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.


அப்போது, பாலக்கோடு புறவழிச்சாலை நான்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது டிராக்டரின் என்ட் (End) கட்டாகி கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் எதிரே வடிவேல் ஓட்டி வந்த சொகுசு கார் மீது மோதியது, இதில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையோரம் உள்ள 5 அடி பள்ளத்தில் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு தலைகுப்புற கவிழ்ந்தது.


இதில் பலத்த காயமடைந்த வடிவேலுவை அக்கம் பக்கத்தினர்  மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த பாலக்கோடு காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad