இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் தவுளத்பாஷா தலைமையில் பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீரமணி, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன் மாவட்டத் துணைச் செயலாளர் உமாசங்கர், நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் திருவேங்கடம். ஆகியோர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் கீழ் பேருந்து நிலையத்திலிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கையில் கொடிகளை ஏந்தியவாறு கோஷம் இட்டு முக்கிய கடைவீதி வழியாக மூன்றோடு சந்திப்பு வந்தடைந்தனர். அதன் பின்னர் பட்டாசு வெடித்தும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட நெசவாளர் அணி சி கே சரவணன், கிளைச் செயலாளர்கள், தனசேகரன், வார்டு உறுப்பினர் மூசாகலிம்முல்லா. தமிழ்ச்செல்வன் மற்றும் பிரகாசம். மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக