ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 நவம்பர், 2024

ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் இன்று (05.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், சுஞ்சல்நத்தம் ஊராட்சி, ஈச்சம்பாடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (2024-25) கீழ் ரூ.20.42 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணிகளையும், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், ஏரியூர் முதல் சிடுவம்பட்டி வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (2024-25) கீழ் ரூ.100.06 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை அமைக்கும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


மேலும், தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், கோடிஅள்ளி ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் (2024-25) கீழ் பழுதடைந்த வீடுகள் புதுப்பிக்கும் பணிகளையும், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ள திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுள்ளது என செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கல்பனா, திரு.அபுல்கலாம் ஆசாத் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad