கடந்த செப்டமர் 27ம் தேதி கிருஷ்ணகிரி செல்ல வேண்டிய அருணா என்ற பெண் பேருந்தில் ஏறினார். ஆனால் பேருந்தை பாலக்கோடு பஸ் நிலையத்தில் இருந்து பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு அந்த பெண்னை கீழே இறக்கி விட்டதால் அப்பெண் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் பேருந்து ஓட்டுநரை எச்சரித்து இனி இது போல் செயல்படக் கூடாது என எச்சரித்து சென்றார். ஆனால் தொடர்ந்து பேருந்து கிருஷ்ணகிரி வழித்தடத்தில் இயக்கப்படாதது குறித்து பயணிகள் மாவட்ட கலெக்டர் சாந்தி அவர்களுக்கு புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உத்தரவின் பேரில் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி பேருந்தை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க மாவட்ட கலெக்டர்க்கு பரிந்துரை செய்தார். மேலும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்காத பேருந்து உரிமையாளர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக