தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல், ஒழித்தல் (Illicit Arrack) மற்றும் போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் ஒழித்தல் (NCORD) தொடர்பாக துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (04.11.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு இருக்கும் எனில் விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக இது குறித்து போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திடவேண்டும்.
மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில் அடிக்கடி மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் மருந்து கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்தகுழு ஒருங்கிணைந்து செயல்பட்டு, போதைப்பொருட்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) திருமதி.எஸ்.மகேஷ்வரி, உதவி ஆணையர் கலால் திருமதி.நர்மதா, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் திருமதி.பானுசுஜாதா, தேசிய நல குழுமம்/தேசிய நியமன அலுவலர் மரு.ராஜ்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அலுவலர்கள், மாவட்ட மனநல திட்ட அலுவலர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக