மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் ஒரு உதவியாளர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கிட ஆணையிட்டு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென பல்வேறு முன்மாதிரி திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி 2035 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 6871 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளும், கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1340 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.3.21 கோடி பராமரிப்பு உதவித்தொகைகளும், 40% மேல் மனவளரச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4843 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.11.62 கோடி பராமரிப்பு உதவித்தொகைகளும், 40% தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 133 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ. 31.92 இலட்சம் பராமரிப்பு உதவித்தொகைகளும், 40% மேல் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 337 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.80.88 இலட்சம் பராமரிப்பு உதவித்தொகைகளும், 40% மேல் முதுகு தண்டுவடம் நாள் பட்ட நரம்பியல் நோய் மற்றும் பாரகின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.25.44 இலட்சம் பராமரிப்பு உதவித்தொகைகளும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 362 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28.22 இலட்சம் கல்வி உதவித்தொகைகளும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30,000-மும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 41 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.08 இலட்சம் வங்கி கடன் மான்யமும், ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 இலட்சம் மான்யமும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 5% பங்கு தொகையினை அரசே வழங்கும் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.50500 நிதியுதவியும், தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் மூலம் வங்கி கடனுதவி வழங்கும் வழங்கும் திட்டத்தின் கீழ் 402 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.24 கோடி வங்கி கடன் உதவியும், மாற்றுத்திறனாளி நபர்களை நல்ல நிலையில் உள்ள நபர்கள் திருமணம் செய்து கொவதற்கு திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.00 இலட்சம் திருமண நிதி உதவியுடன் தலா 8 கிராம் தங்க நாணயமும், மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.36 இலட்சம் மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23.32 இலட்சம் மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், மாற்றுத்திறனாளி களுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 73 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.08 இலட்சம் மதிப்பீட்டிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதியோகமாக வடிவமைக்கபட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.70 இலட்சம் மதிப்பீட்டிலான பிரதியோகமாக வடிவமைக்கபட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், பார்வையற்ற மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டிலான பார்வையற்ற மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய கைபேசிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டிலான காதொலிக்கருவி களும், 0 முதல் 6 வயது வரையுள்ள செவித்திறன் பாதிக்கப்பட்ட 23 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.5.08 இலட்சம் செலவில் ஆரம்ப நிலை பயிற்ச்சிகளும், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிக்கு உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.07 இலட்சம் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மான்யமும், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிக்கு உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் 03 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.84 இலட்சம், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16.62 இலட்சம் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மான்யமும், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.00 இலட்சம் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மான்யமும், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தில் உள்ள 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.87 இலட்சம் செலவில் பாரமரிப்பு மையத்திற்கு பணியால் ஊதிய மானியம் மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுவதற்கான நிதியுதவியும், என மொத்தம் 17772 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.218.03 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நெருப்பூர் பகுதியை சேர்ந்த திரு.நந்தகுமார் அவர்கள் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று, பயனடைந்து, இத்திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்தது மனம் என்று தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக