- Level 1- மருத்துவமனை என்பது அடிப்படை வசதிகள் மற்றும் பிரசவ அறை உள்ள மருத்துவமனையாகும். இம்மருத்துவமனையில் High Risk தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கக் கூடாது.
- Level 2- பிரசவ அறை மற்றும் அறுவை அரங்கு உள்ள மருத்துவமனைகளாகும். இதில் இருதய பாதிப்பு, இரத்த அழுத்தம். வலிப்பு நோய், தீவிர நோய் தொற்று, உயர் சர்க்கரை அளவு, மயக்கநிலை, தீவிர நிமோனியா தொற்று, தீவிர டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை, தீவிர சிகிச்சை பிரிவு (ICU) அனுமதிக்கும் தாய்மார்கள் மற்றும் பிற தீவிர தொற்று ஏற்படும் தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கக் கூடாது.
- Level 3- பிரசவ அறை, அறுவை அரங்கு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) உள்ள மருத்துவமனையாகும். இதில் அனைத்து விதமான நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம்.
நமது மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் ஜீலை 2024 வரை மகப்பேறு மரணங்கள் எதுவும் நிகழவில்லை. ஆகஸ்ட் 2024-ம் மாதத்தில் 2, செப்டம்பர் 2024-ம் மாதத்தில் 2. அக்டோபர் 2024-ம் மாதத்தில் 2, நவம்பர் 2024-ம் மாதத்தில் 1 என மகப்பேறு மரணங்கள் நடந்துள்ளது. எனவே, மகப்பேறு மரணங்கள் நிகழாமல் தடுக்க மருத்துவமனைகளுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
Low Risk -ல் இருந்து High Risk-க்கு மாறும் தாய்மார்களை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அவசர ஊர்தியின் மூலம் அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்து அனுப்பப்பட்ட தாய்மார்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் PICME PORTAL-ல் Entry போட வேண்டும். பிறகு Whatsapp Group-ல் பதிவிட வேண்டும். மாதந்தோறும் 50 பிரசவத்திற்கு மேல் பார்க்கப்படும் மருத்துவனைகளில் Blood Storage Centre அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் 24 மணிநேரமும் இயங்கிவரும் மகப்பேறு மருத்துவமனைகளில் ஒரு மகப்பேறு பணிமருத்துவர் கட்டாயமாக பணியில் இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டால் தமிழ்நாடு மருத்துவமனைகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் (Tamil Nadu Clinical Establishment Act) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
சென்ற வாரம் தருமபுரி மாவட்டத்தில் மகப்பேறு மரணம் நிகழ்ந்த மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு. அம்மருத்துவமனையின் தரம் Level 3 -ல் இருந்து Level 2 ஆக தரவிறக்கம் செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் அம்மருத்துவமனையில் Complicated High Risk தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கக்கூடாது என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்களின் உத்தரவின்பேரில் அறிவுறுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக