தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மீன்வளத்துறையின் சார்பில் உலக மீன்வள தினமானது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று கொண்டாடப்பட்டு, மீனவர்களுக்கு ரூ.3.85 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மீன்வளத்துறையின் சார்பில் உலக மீன்வள தினமானது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (21.11.2024) கொண்டாடப்பட்டு, மீனவர்களுக்கு ரூ.3.85 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- உலக மீன்வள தினமானது நீடித்த நிலையான மீன்வளத்திற்கான உத்திரவாதம் வழங்கி அதனை பாதுகாத்திடும் பொருட்டு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 21-ஆம் நாள் நீடித்த நிலையான மீன்வளத்தை கடைப்பிடித்து பாதுகாத்தல், சட்டவிரோத மற்றும் ஒழுங்குப்படுத்தப்படாத மீன்பிடி முறைகளை அகற்றுதல், மீன்பிடி சமுதாயத்திற்கான மனித உரிமைகளை பாதுகாத்து நிலைநாட்டுதல் என்ற நிலைப்பாட்டினை வலியுறுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான உலக மீன்வள தினமானது “நீர்வாழ் உயிரினங்கள் பல்கிப் பெருகட்டும்” என்ற சாராம்சத்தை வலியுறுத்தி கொண்டாடப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு மீன்வளத்தை பாதுகாக்க வேண்டியதின் அவசியம், நீடித்த நிலையான மீன்வளத்தை பெருக்குதல், நீர்நிலைகளில் நெகிழி பயன்பாட்டினை தடை செய்தல் மற்றும் அனுமதிக்கப்பட்ட மீன்பிடிப்பு முறைகளை பின்பற்றுதல் போன்றவைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
மேலும், மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் மீனவர்களுக்கு தொழில் முதலீட்டிற்கான விவசாயக் கடனுதவி மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நிவாரண உதவித் தொகை என ரூ.3.85 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் மீனவர்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மண்டல மீன்வள துணை இயக்குநர் திரு.சுப்பிரமணியன், மீன்வள உதவி இயக்குநர் திரு.கோகுலரமணன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதி.ஆ.நித்யலட்சுமி, மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக