உலக நவீன வாசக்டமி (NSV) விழிப்புணர்வு பேரணி இரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 நவம்பர், 2024

உலக நவீன வாசக்டமி (NSV) விழிப்புணர்வு பேரணி இரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்ப நலத் துறை சார்பில், உலக நவீன வாசக்டமி (NSV) இருவாரம் அனுசரிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி இரதத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்ப நலத் துறை சார்பில், உலக நவீன வாசக்டமி (NSV) இருவாரம் அனுசரிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி இரதத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (27.11.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். தருமபுரி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி சிறப்பு முகாம்கள் 2024 நவம்பர் 21 முதல் தொடங்கி டிசம்பர் 04-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு ஆண்களுக்கான நவீன
குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த அரசால் இருவார விழிப்புணர்வு விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு குடும்பநல துறையின் மூலம் தகவல் வழங்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்பநல ஆண் கருத்தடை முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாசக்டமி (NSV) செய்து கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1100/- வழங்கப்படும். 


நவீன வாசக்டமி எளிமையானது, பாதுகாப்பானது, தையலின்றி, தளும்பின்றி செய்யப்படுகிறது. கடின உழைப்புக்குத் தடை இல்லை. ஆண்மைக் குறைவு ஏற்படாது எனவும் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டின் கருப்பொருள் "குடும்பக் கட்டுப்பாடு பற்றி இணைந்தே பேசுவோம் அதனை இன்றே தொடங்குவோம்" மேலும், விபரங்களுக்கு 73581 24022, 87784 74051 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளவும். 


இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு. புவனேஸ்வரி , துணை இயக்குநர் (காசநோய்) மரு. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தொடர்புடைய மருத்துவர்கள், தருமபுரி மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், துறைசார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad