பாலக்கோடு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 நவம்பர், 2024

பாலக்கோடு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலக்கோட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் மாணவியிடம் நட்பாக பழகி வந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 19ம் தேதி மாலை 6 மணிக்கு  மாணவியின் வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் மாணவியும், வாலிபரும் பேசிக் கொண்டிருந்ததாகவும், சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாகவும் இது குறித்து வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மாணவி பாலக்கோடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad