பாப்பாரப்பட்டி அருகே மாற்று விவசாயத்தில் அசத்தும்பட்டதாரி இளைஞர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 நவம்பர், 2024

பாப்பாரப்பட்டி அருகே மாற்று விவசாயத்தில் அசத்தும்பட்டதாரி இளைஞர்.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஒசஅள்ளிபுதூர் கிராமத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர் முருகன் வயது (33) முதுகலை பட்டதாரியான இவர் வேலையின்றி இருந்து வந்தார். இந்நிலையில் குடும்ப வருமானம் இன்றி தவித்து வந்தது இந்த நிலையில் விவசாயத் தொழிலை கையில் எடுத்தார். 


எந்தப் பயிர் இட்டாலும் விவசாயிகளுக்கு செய்த முதலீடுக்கு விளைவதில்லை அப்படியே விளந்தாலும் அதற்கு விலை போவதில்லை என்பதே விவசாயிகளின் நிலைமையாக உள்ளது. இதற்கு மாற்றாக தான் இந்த விவசாயத்தை கையில் எடுத்துள்ளார். பட்டதாரி இளைஞர் விவசாயி முருகன் நெல் பயிர் நடவு செய்வதென்றால் முதலில் நிலத்தை உழுது பதிலடித்து அதற்கேற்றார் போல் தலைச்சத்து கொடுத்து ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரத்திற்கு மேல் செலவாகும். 


ஆனால் இவர் செய்யும் மாற்று விவசாயத்திற்கு நிலத்தை முழுவதும் ராகி பயிர் இடுவது போல் பாத்தி போன்று தடுத்து பயிரிட்டால் போதும் செலவு ஒரு ஏக்கருக்கு 5ஆயிரம் முதல் 7 ஆயிரம்  வரை செலவு குறைகிறது. தண்ணீர் செலவும் குறைகிறது. விளைச்சலும் அதிகரிக்கிறது என்று அசத்தி காட்டியுள்ளார் விவசாயி முருகன்

கருத்துகள் இல்லை:

Post Top Ad