வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் தூள்செட்டி ஏரி திட்டம் நிறைவேற்றப்படும் - MP ஆ.மணி பேச்சு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 நவம்பர், 2024

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் தூள்செட்டி ஏரி திட்டம் நிறைவேற்றப்படும் - MP ஆ.மணி பேச்சு.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திமுக மேற்கு ஒன்றியத்திலுள்ள பஞ்சப்பள்ளி, கும்மனூர் சூடானூர், நம்மாண்டஅள்ளி, சாமனூர் , அத்திமுட்லு, கென்டேனஅள்ளி, சின்ன கும்மனூர், கொரவாண்டஅள்ளி, எம். செட்டி அள்ளி, சி.எம்.புதுர், கொலசனஅள்ளி உள்ளிட்ட  பகுதிகளில் வாக்காளர்களுக்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.கே. அன்பழகன் தலைமையில் நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், வழக்கறிஞர் நஞ்சுண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள், நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எனக்கு  வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தவர், வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தூள்செட்டி ஏரிகால்வாய் பணிகள் நிறைவேற்றப்படும் எனவும், தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து வருவதாக தெரிவித்தவர். 


மேலும் தர்மபுரி மாவட்டத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக பேசினார். முன்னதாக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கிளை கழக செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள்  பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad